ஐ.பி.ல் சூதாட்டம், நாட்டுக்கோ, கிரிக்கெட்டுக்கோ நல்லதல்ல ஐ.பி.ல் கிரிக்கெட் தொடரில் நடந்துள்ள சூதாட்டத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஐபிஎல். பந்தயங்களில் ‘ஸ்பாட் பிக்சிங்கை பா.ஜனதா கண்டிக்கிறது. இது துரதிருஷ்ட வசமானது. குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த சூதாட்டம், நாட்டுக்கோ, கிரிக்கெட்டுக்கோ நல்லதல்ல. இனிமேல் இத்தகைய சூதாட்டம் நடக்காதவகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply