கூட்டுக்குழு அறிக்கையை பரிசீலிக்க அமைச்சர் குழுவுக்கு உத்தரவிடமுடியாது சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம்வழங்குவது குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையை பரிசீலிக்க அமைச்சர் குழுவுக்கு உத்தரவிடமுடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதுகுறித்து பரிசீலிக்க முக்கியஅமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழுவினர், கடந்த சிலநாட்களுக்கு முன்பு சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதுகுறித்து கலந்தாலோசனை நடத்தினர்.

இந்நிலையில், கோடைவிடுமுறை கால உச்சநீதிமன்ற அமர்வில், நாடாளுமன்ற குழு அறிக்கையை பரிசீலிக்க மத்திய அமைச்சரவைகுழுவுக்கு உத்தரவிடமுடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply