நெல்லியின் மருத்துவ குணம் நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும்பொது அதில் ஒருதுளி விழுந்ததாம் . அதிலிருந்து முளைத்து உண்டானது தான் நெல்லி மரம் . நெல்லிமரம் உள்ள இடத்தில் லக்ஷ்மி வாசம்செய்வாள் என்பது நம்பிக்கை .

ஏகாதசியன்று நெல்லிக்கனிகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு , சிறிதுநேரம் ஊறவைத்து ,அதில் நீராடவேண்டும் .ஏகாதசிக்கு மறு நாள் துவாதசி திதியில் நெல்லிக்கனியை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.ஆன்மீகரீதியாக நெல்லிநீரில் குளிப்பதை கங்கையில் நீராடி காசியில்வசித்த புண்ணியத்திற்கு சமம் என்கின்றனர் .நெல்லி ஆயுள்விருத்தி தரக்கூடியது ஆகும் .

நெல்லிக்காய் ஆரோக்கியம்தரும் ஒரு அருமருந்து. பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்துஉடையது. ஆயுளை வளர்க்கச்செய்வது. வைட்டமின் சி சத்தும் புத்தியைவளர்க்கும் பாஸ்பரஸ்சத்தும் மிக்கது.

சுத்தமான நல்ல தண்ணீரில் இரண்டு நெல்லிக் காய்களை போட்டு ஊற வைத்து அந்த தண்ணீரை எடுத்து கண்களை நன்குகழுவினால் ,கண்சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளைஇ து குணப்படுத்தும்.நெல்லியில் உடலுக்குஅவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிகளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. உயிர்ச் சத்தான வைட்டமின் 'சி' சத்து இதில் நிறைந்துள்ளதால் இந்தியமருத்துவத்தில் உபயோகிக்கப்படுகின்றன. பட்டை, வேர்,இலைகள், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவப்பயனுள்ள பகுதியாகும் .இலைகளின் சாறு நாட்பட்டபுண்களுக்கு பூசப்படுகிறது. வடிசாறு வெங்காயத்துடன் கலந்து வயிற்றுப்போக்கினை தீர்க்கும். பட்டையும், வேரும் சதை இறுக்கும் தன்மைகொண்டவை.சிறுநீரகக்கோளாறு, இரத்தச்சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரணநோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரைநோயாளியின் கணையத்தை வலுவேற்ற நெல்லிக்காய் உதவும்.நெல்லிப்பழங்களை விதைநீக்கி இடித்துச் சாறு பிழிந்து சமஅளவு சர்க்கரைசேர்த்து மணப்பாகு தயார்செய்து அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்தசம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கைநடுக்கம் குணமாகிறது.நெல்லிக் காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன்குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை.

நெல்லிப்பழத்தில் முழுமையும் மரம் பயன்பட்டு சிறப்படைவது போன்று மனிதஉடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்டஆயுளும் நெல்லிக்காய் தருகிறது.நெல்லிக் காய் இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற் புண், இரத்தப் பெருக்கு, நீரிழிவு, கண்நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். நெல்லிக் கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவகுணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்னவேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியூறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும்.

 

வைட்டமின் சி செறிவுள்ளது நெல்லிக்கனி. இது விஷசுரம், வாந்தி, உறக்கமின்மை, பித்தப்பையில் ஏற்படும் திருகுவலி, வாந்தி, பார்வைக்குறைபாடு போன்ற உபாதைகளில் குணம் பெற உதவும்.

நெல்லிக்கனி குளிர்ச்சியானது, நலமூட்டுவது, மலத்தை இளக்குவது, சிறுநீரைப் பெருக்குவது ஆகும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க நெல்லிக் கனியின் சாறு பயன்படுத்தப்படுகிறது. மங்கிய பார்வையை திரும்பப்பெற தினமும் வழக்கமான சாப்பாட்டுக்குப் பிறகு நெல்லிக்கனி சாற்றை உண்டுவர வேண்டும்.

இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் ஓர் நெல்லிக்கனியை உண்டுவந்தால் அது உறக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். தேங்காய் எண்ணெயில் நெல்லிச் சாறு கலந்து உப யோகிக்க முடி உதிர்வது தடுக்கப்படும். முடியின் வேர்க் கால்கள் உறுதி அடியும். இரவில் உபயோகிக்க வேண்டும்.

பெண்களின் வெள்ளைப் படுதலை நெல்லிச்சாறு சக்திவாய்ந்த முறையில் குணப்படுத்தும்.

சுவாசக் கோளாறு
நுரையீரல், ஆஷ்துமா மற்றும் மார்புச்சளி நோயில் விசேஷ குணமளிக்கும். அதிக நற்பலன்களை வழங்கும் ஒரு 'டானிக்'காகவே இது செயல்படும்.

நீரிழிவு
ஒரு மேசைக்கரண்டி நெல்லிச்சாற்றுடன் ஒரு கோப்பை பாகற்காய் சாறுகலந்து தினமும் பருகிவர (இரண்டு மாதங்கள்) இன்சுலின் சுரக்கும். உயிர் அணுக்கூட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

இவ்வாறாக நீரிழிவில் இரத்த சர்க்கரையைக் குறைக்கும், இம்மருந்தைப் பிரயோகிக்கிற நாட்களில் உணவுக் கட்டுப் பாட்டைக் கடைபிடிக்க வேண்டி இருக்கும். நீரிழிவின் விளைவாக பார்வைக் கோளாறு ஏற்படுவதை இது தடுக்கும்.

நெல்லிப்பொடி, நாவல்பொடி மற்றும் பாகற்காய் பொடி சம அளவு கலந்து உண்ண நீரிழிவுக்கு பரிகாரமாக அமையும்.

இருதய நோய்
உடம்பின் அனைத்து உறுப்புகளின் இயக்கத்தையும் ஊக்குவிப்பதன் மூலம் இருதயநோய் ஏற்படாமல் காக்கும். பல வேற்றியல்புள்ள பொருட்களை அழிப்பதன் மூலம் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஹேர் டானிக்
முடிவளர்க்கவும், நிறம்காக்கவும் நெல்லிச்சாறு உதவும். நெல்லித் தைலம் சிறந்த கூந்தல் தைலமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நெல்லியைப் பறித்து, நிழலில் உலர்த்திக் கொள்ளவேண்டும். சிறுதுண்டுகளாக்கி உலர்த்தவேண்டும். இந்தத் துண்டுகளை தேங்காய் எண்ணெயில் இட்டு கருக்கு ஆகிறவரை காய்ச்சவும். திடப்பொருள்கள் பொடியாகி விடும். எண்ணெய் கருமை நிறத்தில் இருந்தால் நரையை கண்டிப்பாகத் தடுக்கும்.

இவ்வளவு மருத்துவபலன்களை கொண்ட நெல்லிக்காயை தினசரி வாழ்வில் பயன் படுத்தி உடல்நலத்தை பெறுவோம்.

நம் வரும் சந்ததி பயன்பெற நம்மால் முடிந்தளவு நெல்லிமரங்களை வளர்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *