மலேசியா வாழ் தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் தொடர்ந்து_ படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக தமிழ் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது , மலேசியாவில் வாழும் இந்தியவம்சாவளி தமிழர்கள் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித காரணங்களும் இன்றி சுட்டுக்கொல்லப்பட்டு வருவதாக அங்கிருந்து அதிர்ச்சிதரும் செய்திகள் வருகின்றன. பல நூற்றாண்டுகளாக அங்குவாழும் தமிழர்கள் மலேசிய தமிழர்கள் என அழைக்கப்பட்டு மலேசியப்பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்களின் மீது இத்தகைய கொடுமைகள் இழைக்கப்படுவது வேதனை தருகிறது .

இனியும் தாமதம் செய்யாமல் மலேசிய அரசின் தமிழர்களுக்கு எதிரானசெயல்களை தடுத்து நிறுத்தவேண்டும். இந்த விஷயத்தை மத்தியஅரசின் கவனத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கொண்டு செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply