நிலக்கரி சுரங்க ஊழலை விசாரிக்கும் சி.பி.ஐ. சூப்பிரண்ட் லஞ்சம் வாங்கியதாக கைது உச்ச நீதிமன்ற கிடுக்குபிடியால் வலுவடைந்து வரும் நிலக்கரிசுரங்க முறைகேடு தொடர்பான சிபிஐ. விசாரணை குழுவின் தலைவராக பொறுப் பேற்றிருக்கும் சூப்பிரண்ட் ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும்களவுமாக பிடிபட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுநடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் சிபிஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.இந்தவிசாரணை அறிக்கையை சட்டமந்திரியுடன் பகிர்ந்துக்கொண்ட சிபிஐ. இயக்குனருக்கு சமீபத்தில் சுப்ரீம்கோர்ட் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், நிலக்கரி சுரங்கமுறைகேடு தொடர்பான சிபிஐ. விசாரணை குழுவின் தலைவராக பொறுப் பேற்றிருக்கும் சூப்பிரண்ட் நேற்று ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும்களவுமாக பிடிபட்டார்.நிலக்கரிசுரங்க முறைகேடு தொடர்பான விசாரணையில் இருந்து வேறுபட்ட மற்றொரு சிபிஐ. விசாரணையில் நில தகராறு தொடர்பான வழக்கை நீர்த்துப்போக செய்வதற்காக சிபிஐ. சூப்பிரண்ட் விவேக்தத் ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார்.

இவ்விவகாரம் சிபிஐ.யின் உட்பிரிவு புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. சிபிஐ. இயக்குனர் ரஞ்சித்சின்கா நேரடி மேற்பார்வையில் நடைபெற்ற தீவிரகண்காணிப்பில் . சூப்பிரண்ட் விவேக்தத், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ. தலைமை அலுவலகவாசலில் கைதுசெய்யப்பட்டனர்.இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Leave a Reply