சீனப் பிரதமர் லீகெகியாங் முன்று நாள் பயணமாக (ஞாயிற்றுக்கிழமை) இன்று இந்தியா வருகிறார்.

ஞாயிற்றுக் கிழமை மதியம் தில்லி வரும் லீ, மாலை பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு எல்லைப்பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இருதலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தவிர, இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகபற்றாக்குறை, மண்டல மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சர்வதேசபிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர். லீக்கு மன்மோகன்சிங் இரவு விருந்து அளிக்கிறார்.

Leave a Reply