பாகிஸ்தான் சிறைகளில்  உள்ள இந்திய கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அழுத்தம்கொடுக்க வேண்டும் பாகிஸ்தான் லாகூர்சிறையில் சம்பாலி சிங் என்ற இந்தியர் கடந்த ஜனவரிமாதம் 15-ம் தேதி சககைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினருக்கு நிதியாக 2லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் காசோலையை பாஜக.,வின் ராஜியசபா உறுப்பினர் அவினாஷ்ராய் கண்ணா நேற்று வழங்கினார்.

அப்போது அவர் கூறியாதாவது:-

பாகிஸ்தான் சிறைகளில் 800 இந்தியர்கள் வரை அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அரசோ 270 இந்தியர்கள்மட்டுமே சிறையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம்கொடுக்க வேண்டும்.

சரப்ஜித்சிங் குடும்பத்துக்கு பஞ்சாப் அரசு வழங்கியதுபோல், சம்பாலிசிங் குடும்பத்துக்கு ஜம்முகாஷ்மீர் அரசு 1 கோடி நிதி வழங்கவேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply