அமீத் ஷா உத்தரப் பிரதேச மாநில பாஜக பொறுப்பாளராக நியமனம்  குஜராத் மாநில பாஜக முக்கிய தலைவரும் தேசிய பொதுச்செயலாளருமான அமீத் ஷா உத்தரப் பிரதேச மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் . மேலும் வருண் காந்தியை, மேற்குவங்க மாநில பொறுப்பாளராகவும் அறிவித்துள்ளார் கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங்.

தமிழக பா.ஜ.க.வுக்கு பொறுப்பாளராக முரளிதர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இல. கணேசன் அந்தமான் – நிக்கோபார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். . ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பண்டாரு தத்தாத்ரேயா கேரளாவுக்கும், ராஜீவ்பிரதார் ரூடி மகாராஷ்டிராவுக்கும் பொறுப்பாளர்களாக பா.ஜ.க., மேலிடம் அறிவித்துள்ளது.

Leave a Reply