தவறுகளை மறைத்து விட்டு  காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது தங்களுடைய தவறுகளை மறைத்து விட்டு ஏழைகளின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதை போன்று காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது என பாரதிய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது.

கேரளத்தில் மே 18-ஆம் தேதி நடந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றவிடாமல் நாடாளுமன்றத்தை பா.ஜ.க., முடக்கிவிட்டது; ஏழைமக்களுக்கு எதிரான பா.ஜ.க.,வின் செயல்பாடு மிகுந்தவருத்தத்தை தருகிறது என்று பேசியிருந்தார்.

இது குறித்து பா.ஜ.க.,வின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சிசெய்யும் ஆந்திரத்துக்கு ராகுல்காந்தி ஏன் செல்லவில்லை. அங்கு ஊழல்காரணமாக மூன்று அமைச்சர்கள் பதவியை ராஜிநாமாசெய்துள்ளனர். மேலும் ஆறு அமைச்சர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தை பா.ஜ.க., முடக்குவதாக ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர்கள் அஸ்வனிகுமார், பவன் குமார் பன்சால் ஆகியோர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க., நாடாளுமன்றத்தை முடக்கியது. கடும் எதிர்ப்புக்குப்பிறகு அவர்கள் பதவி விலகியுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தபோதே இதைச்செய்திருந்தால் அவை நடவடிக்கை பாதிக்கப் பட்டிருக்காது.

அரசுக்கேதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேள்விகேட்டால் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சி மெüனம் சாதிக்கிறது. ஆனால் உணவுப்பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றவிடமால் பாஜக தடுப்பதாக ராகுல் கூறுகிறார்.

தங்களுடைய தவறுகளை மறைத்து விட்டு ஏழைகளின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதை போன்று காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது என்றார் நிர்மலா சீதாராமன்.

Leave a Reply