சுனாமியால் பாதிக்கப்பட்ட சென்னை மீனவர்களுக்கு சுனாமிவிடூகள் ஒதுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக, நேற்று சென்னை லைட் ஹவுஸ் அருகே நூதனபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கலங்க ரை விளக்கம் அருகே நொச்சிக்குப்பம், நொச்சிநகர் மீனவ பகுதிகள் உள்ளன. சுனாமியின்போது இங்குள்ள மீனவகுடும்பத்தினர் வீடுகள் பாதிக்கப்பட்டது. சுமார் 1200 குடும்பங்கள் பாதிக்கப் பட்டதாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கு புதியவீடு கட்ட அரசு முடிவுசெய்தது. அதுவரையில் அவர்கள் தற்காலிகமாக தங்க கூடாரம் அமைத்துகொடுத்து இருந்தனர்.

சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டும் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் வெயில், மழைகாலங்களில் அவர்கள் குடியிருக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து மீனவர்களுக்கு கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகளை விரைவில் ஒப்படைக்ககோரி பாஜக.,வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலங்கரை விளக்கம்அருகே பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினருடன் இணைந்து நடுரோட்டில்  சமையல்செய்தனர். போராட்டத்திற்கு மண்டல தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் வழக்கறிஞர் வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இதில் சுமார் 300 பேர் வரை கலந்துகொண்டனர்.

பிறகு அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் வழக்கறிஞர் வானதி சீனிவாசன் தெரிவித்ததாவது , “சுனாமியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடுகட்டப்பட்டு பலமாதங்கள் ஆகிவிட்டன. அந்தவீடுகளை அவர்களுக்கு ஒதுக்காமல் அரசு காலம்தாழ்த்தி வருகிறது. இதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். விரைந்து அவர்களுக்கு வீடுகளை ஒதுக்கவேண்டும்.” என்றார்.

Tags:

Leave a Reply