பாஜக.,வின் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு தயார் தேர்தல் நிலைபாடு குறித்து பா.ஜ.க பார்லிமென்டரி போர்டு டில்லியில்கூடி ஆலோசனை மேற்கொண்டது . இந்தகூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், மத்தியஅரசு அனைத்து துறைகளிலும் தோல்வி யடைந்து விட்டதாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் வரும் திங்கள்கிழமை முதல் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்நடத்துவது என்று பா.ஜ.க சார்பில் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தகூட்டத்தில் ம.பி., சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபைதேர்தல் குறித்தும் விவாதிக்க்ப்பட்டது. மேலும், வரும் பாராளுமன்றதேர்தலுக்கு கட்சி தயாராக இருப்பதாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக பொது செயலாளார் ஆனந்த்குமார் தெரிவித்ததாவது , ஐ.மு., அரசின் ஆட்சிகுறித்து விவாதிக்கப்பட்டது. அரசு அனைத்து_துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது. வரும் 27ம் தேதிமுதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

ஐ.மு.,கூட்டணி ஆட்சிசெய்த கடந்த ஒன்பது வருடங்களில் அனைத்துசெயல்களிலும் தோல்வி அடைந்துள்ளது .மத்திய அரசின் தோல்விகளை பாஜக அடுத்த பாராளுமன்றதேர்தலின் போது எடுத்துரைக்கும் . பாஜக.,வின் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்குதயார். என்று ஆனந்த் குமார் கூறியுள்ளார்.

Leave a Reply