இப்போதைய சூழ்நிலையில் மக்களவைக்கு தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்திக்கும் என்று மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பின் படி, பா.ஜ.க., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களை வென்று ஆட்சியைபிடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டால் பாஜக கூட்டணிக்கு 220 இடங்கள் கிடைக்கும் என்றும். காங்கிரஸ் கூட்டணி 155 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன . இதில் நரேந்திர மோடி பிரதமர் வேட்ப்பாளராக அறிவிக்க பட்டால் கூடுதலான 41 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதில் அதிமுக 30 இடங்களையும் , திரினாமுல் காங்கிரஸ் 23 இடங்களையும், YSR காங்கிரஸ் 11 இடங்களையும், மதிமுக 2 இடங்களையும் பிடிக்கும் என்று இவைகள் அனைத்தும் பாஜக.,வுக்கு ஆதரவு தரலாம் என்றும், அப்படி தந்தால் ஆட்சி அமைப்பதற்க்கான பெரும்பான்மை கிடைத்து விடும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன .

Leave a Reply