அத்வானியுடனான சந்திப்பு மனநிறைவை தருகிறது பாஜக.,வின் மூத்த தலைவர் எல்கே.அத்வானியுடனான சந்திப்பு மிகுந்த மனநிறைவை தந்ததாக என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.,வின் ஆட்சி மன்றக்குழுவில் முதல் முறையாக கலந்து கொண்ட மோடி அது குறித்து தனது டுவிட்டர் சமூக வலைத் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

பா.ஜ.க., ஆட்சி மன்றக்குழுவில் பங்கேற்ற மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து உரையாடியது மிகவும் மனநிறைவை தருகிறது. மேலும் பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவர் நிதின்கட்கரியை தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது பலவிஷயங்கள் குறித்து விவாதித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply