காமன் வெல்த்தில் களவாடி
ஆதர்சில் பல மாடி
2ஜியில் பல கோடி
நிலக்கரியில் "விலை" ஆடி

"எலி காப்டரில்"- ஏறிய
மன்மோகன் "பின் துக்ளக்கே"
சோனியா என்னும் "பூலன் தேவியே"
காங்கிரஸ் என்ற "கப்பார் சிங்கே"
உங்கள் ஆட்சியில்—–

பயங்கரவாதி குண்டு வைப்பினால்
எங்களுக்கு வாரம்தோறும் தீபாவளி
கற்பழிப்புக்கு எதிரான போராட்டங்கள்
இங்கு தினசரி சித்திரை திருவிழா

ராணுவ வீரர்களின் தலைசீவி
சரப்ஜித்தின் உயிர் குடித்து
பாகிச்தான் செய்த  பயங்கரமும்
19 கி.மீ-இந்தியாவுக்குள் ஊடுருவி
சீனா செய்த சில்மிஷமும்

தமிழர்களின் உயிரை உரிமையை பறித்து
இந்திய மீனவர்களை தினசரி பிடித்து
ராஜபக்‌ஷே செய்த கொடூரங்கள்
ஐ.மூகூவின் வெளியுறவுக் கொள்கைக்கு பரிசு..

இந்திய மக்களை இம்சிக்கிராய்
பயங்கரவாதிகளை உயிர்ப்பிக்கிறாய்
விலைவாசியை "உயர்"-ப்பிக்கிராய்
"சட்ட அமைப்புக்களை" உடைத்தெரிகிறாய்

சி.ஏ ஜி.க்கு மரியாதை இல்லை
சி.வி.சி.க்கு தன்மானம் இல்லை
மனித உரிமை கமிஷனுக்கு மதிப்பே இல்லை
"இன்ஸ்டியூஷனை" உடைப்பதே காங்கிரசின் கலை

ஐ.மூ.கூக்கு இது 10ஆம் ஆண்டு துவக்கமாம்
ஐ.மு.கூக்கு இன்று இறுதி ஆண்டு துவக்கமே
காங்கிரசுக்கு இது கடைசி ஆண்டு கடைசி ஆட்சி

இன்று துவங்கி இருநூறு நாளில்
காவியின் ஆட்சி சாணக்கிய புரியில்
எந்த சக்தியும் தடுக்க முடியா
இந்து சக்தி டெல்லியை ஆளும்..

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Tags:

Leave a Reply