மன் மோகன்சிங் கட்சிக்கோ நாட்டுக்கோ நல்ல தலைவர் அல்ல மன் மோகன்சிங் பிரதமர்தான் ஆனால் அவர் கட்சிக்கோ நாட்டுக்கோ நல்ல தலைவர் அல்ல என்று பாஜக மூத்த தலைவரும், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான சுஷ்மாசுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஐ.மு கூட்டணி கட்சிகள், பிரச்சினை குறித்து பிரதமரிடம் ஆலோசனைகளை நடத்துகின்றனர். ஆனால் முடிவுகளுக்கோ ஐ.மு கூட்டணியின் தலைவரை எதிர்பார்கின்றன.

கூட்டணிநடத்த சிறந்த தலைவர்கள்தேவை. ஆனால் ஐ.மு கூட்டணியால் அதுபோன்ற தலைமையை நாட்டுக்கு வழங்கமுடியவில்லை.

மக்களுக்கு விருப்பமில்லாத ஒருமுடிவை அரசு எடுக்கும். உடனே ஐ.மு கூட்டணி தலைவர் ஒருகடிதம் எழுதி முடிவை மாற்றக்கோருவார். தவறானமுடிவை எடுத்ததற்காக அரசை திட்டுவதும், முடிவை திருத்தியதற்காக நல்லபெயரை கட்சி பெறுவதும் நடைமுறையாகவே மாறிவருகிறது.

ஐ.மு கூட்டணி ஆட்சியில் ஊழல் எல்லைதாண்டி சென்று கொண்டிருக்கிறது. விலையேற்றத்தினால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு எந்தஆட்சியிலும் இல்லாத அளவுக்கு ஐமு ஆட்சியில் பண வீக்கம் அதிகரித்துள்ளது. பெண்களுக்க எதிரானகுற்றங்கள் அதிகரித்துள்ளன. மாலத் தீவுகள் போன்ற சிரியநாடுகள் கூட இந்தியாவை துணிச்சலுடன் எதிர்க்கின்றன. ஆக மொத்தத்தில் இந்த அரசு தோல்வியடைந்துவிட்டது என்றார்.

Leave a Reply