காங்கிரசை வீழ்த்தும் எண்ணம், அனைத்து தரப்பிலும் வந்துவிட்டது காங்கிரசை வீழ்த்தும் எண்ணம், அனைத்து தரப்பிலும் வந்துவிட்டது சிபிஐ., இல்லை என்றால் எப்போதோ இந்த அரசு கவிழ்ந்திருக்கும்’ என்று பா.ஜ.க., மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க் கட்சி தலைவருமான, அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று இது குறித்து மேலும் கூறியதாவது: காங்கிரசை வீழ்த்தும்எண்ணம், அனைத்து தரப்பிலும் வந்துவிட்டது. அதற்கான மனோபாவம் இனி வரும்காலங்களில், தீவிரமடையும். அப்போது, காங்கிரசை வீழ்த்தி பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும். ஆட்சியில் இருப்பதால், அதிகார மமதையுடன் செயல்படுகிறது காங்கிரஸ்.

சி.பி.ஐ., என்ற அமைப்பை கையில் வைத்துக்கொண்டு, எதிர்க் கட்சிகளை மிரட்டியும், அடிபணியவும் வைக்கிறது. சிபிஐ., என்ற ஒருஅமைப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், மன்மோகன்சிங் அரசு எப்போதோ கவிழ்ந்திருக்கும். சிபிஐ., மூலம், மாயாவதி , முலாயம் சிங் போன்றவர்களை மிரட்டியே, இந்தஅரசு பதவியில் நீடித்து வருகிறது என்று அருண் ஜெட்லி கூறினார்.

Leave a Reply