ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

காஷ்மீரில் நிருபர்களிடம் இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

காஷ்மீரை தங்களதுபகுதி என்று கூறி பாகிஸ்தான் பிரச்சினையை கிளப்பிவருகிறது. காஷ்மீரில் ஒருஅங்குல நிலத்தை கூட பாகிஸ்தானிடம் விட்டுவிடக்கூடாது. பாகிஸ்தானின் சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு குறித்துமட்டுமே அந்த நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

ஐபி.எல் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் செய்தது தொடர்பாக பலர் கைதாகிவருகிறார்கள். இந்த சூதாட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசின் அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது. அவர்கள் யார்-யார்? என்பது விரைவில்வெளியாகும்.

நிலக்கரி சுரங்கஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று அனைத்து ஊழலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசின் பங்களிப்பு இல்லாமல் நடைபெற முடியாது என்றார்.

Leave a Reply