சஷிகாந்த் ஷர்மா நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு  மத்திய கணக்குத் தணிக்கைதுறையின் தலைவராக சஷிகாந்த் ஷர்மா நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய கணக்குத் தணிக்கை துறை தலைவராக இருந்த வினோத்ராய் ஓய்வுபெற்றதை தொடர்ந்து சஷிகாந்த்ஷர்மா நியமிக்கப்பட்டார். பாதுகாப்புத்துறை செயலராக இருந்தவர் சஷிகாந்த்ஷர்மா. இவரது நியமனத்தை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன..

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா,ஜ,க மூத்த தலைவர் அருண்ஜேட்லி, நாட்டின் பாதிபட்ஜெட்டே பாதுகாப்பு துறைக்குத் தான் ஒதுக்கப்படுகிறது. அந்த துரையின் செயலராக இருந்தவவரையே மத்திய கணக்குத் தணிக்கைதுறையின் தலைவராக நியமித்திருப்பதன் மூலம் அவர் பதவிகாலத்தில் நடந்த சர்ச்சைக்குரிய தளவாடகொள்முதல் விசாரணையை அவரேவிசாரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது . என்று கூறியிருந்தார்.

இதேகருத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநலன்வழக்கு ஒன்றும் தொட்ரப்பட்டுள்ளது.

Leave a Reply