ஐ.மு.,கூட்டணி அரசின்செயல்பாடு  பஹதூர்ஷா ஜாபர் ஆட்சியை பிரதிபலிக்கிறது சுதந்திரத்துக்கு பிறகு அமர்த்தப்பட்ட காங்கிரஸ் அரசில் மிகவும்மோசமானது ஐ.மு., கூட்டணியின் 2வது அரசுதான். கடந்த நான்கு வருடங்களில் லஞ்சம், பல்வேறு துறைகளில் ஊழல், அமைச்சர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் என்று தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது.

காங்கிரஸ்சின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்செயல்பாடு மிக மோசமாக உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்த அரசுமீதான நம்பகத்தன்மை குறைந்துவருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்செயல்பாடு முகலாயப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான பஹதூர்ஷா ஜாபர் ஆட்சியை பிரதிபலிப்பதாக உள்ளது .

இந்தியா ஒரு சுதந்திரநாடு. ஆனால் இந்த அரசு நமது பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கைகளை வெளி நாடுகளிடம் அடகு வைத்துவிட்டது.காங்கிரஸ் அரசின் கடைசிபிரதமராக மன்மோகன்சிங் இருப்பார். ஏனெனில் கடந்த 30 வருடங்களில் நாட்டின் பொருளாதாரம், தொழில்துறை உற்பத்தி போன்றவற்றில் குறைந்த வளர்ச்சியைகொண்டு பார்க்கும்போது மன்மோகன் அரசு தோல்வியடைந்துவிட்டது.

இந்த்ப அரசில் சோனியாகாந்தி, மன்மோகன் சிங் என இரண்டு அதிகாரமையங்கள் உள்ளன. அதிகாரம் பிளவு பட்டிருப்பதால், நாட்டை முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்வதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது என்றார் ராஜீவ்பிரதாப் ரூடி.

Leave a Reply