காங்கிரஸ்   பேரணியில்  புகுந்து  மாவோயிஸ்டு தீவிரவாதிகள் திடீர்  தாக்குதல் சத்தீஸ்கர் மாநில அடர்காட்டுப்பகுதி நிறைந்த ஜக்தால்பூரில் காங்கிரஸ்கட்சியினர் நடத்திய பேரணியில் புகுந்து மாவோயிஸ்டு தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் மகேந்திரகர்மா சுட்டு கொல்லப்பட்டார். மேலும் இரு முக்கிய தலைவர்கள் கடத்தி செல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பத்து போலீசாரும், 11 காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உடனடியாக 600க்கும் அதிகமான மத்திய ரிசர்வ்படை போலீசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

Leave a Reply