சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியினரின் பேரணியில் மாவோயிஸ்டுகள் திடீர்தாக்குதல் நடத்தி 22 பேரை சுட்டுக்கொன்றதற்கு பாரதீய ஜனதா தலைவர் அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .

மேலும் இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கவலைதெரிவித்தார். பிறகு அவர் கூறியதாவது:-

நாட்டில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க அரசியலுக்கு அப்பால் அனைத்துகட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படண்டும்.

முதல் மந்திரி ராமன்சிங் கூட யாத்திரை மேற்கொண்டுள்ளார். அனைவரின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த மேலும் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply