முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால், உணவுப்பொருள் விநியோக (கேட்டரிங்) ஒப்பந்ததாரர்களுக்குத்தில் முறைகேடு சாதகமா செயல் பட்டதால் ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

பாஜக தேசிய சட்டப்பிரிவு தலைவர் சத்யபால் ஜெயின் சண்டீகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் ரூ.1 கோடி மதிப்பிலான உணவுப்பொருள் விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்த உரிமக்கட்டணமாக ரூ.15 லட்சம் செலுத்திவந்தனர். இந்தக்கட்டணம் பன்சால் அமைச்சராக இருந்தபோது ரூ.10 லட்சமாக குறைக்கப்பட்டது.

இதன்மூலம் ஒப்பந்த தாரர்களுக்கு ரூ.5 லட்சம் மிச்சமாகியுள்ளது. ஒப்பந்ததாரருக்கு இவ்வாறு சாதகமாக செயல்பட்டதினால் ரயில்வே துறைக்கு மிகப்பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுபோல, சமையல்கூடம் அமைப்பதற்காக உணவுப்பொருள் விநியோக ஒப்பந்ததாரர்களுக்கு ரயில்வே அமைச்சகம் மலிவு விலையில் நிலம் ஒதுக்கீடுசெய்துள்ளது. அதாவது ஒரு ஆண்டுக்கு ஒருசதுர அடிக்கு ரூ.1 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலமும் ரயில்வேதுறைக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்

Leave a Reply