பணத்திற்காக  சூதாட்டத்தில் ஈடுபட்டது அதிருப்தியை தருகிறது கிரிக்கெட்வீரர்கள் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்டது அதிருப்தியை தந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை ஊழல்புரிந்த அரசியல் தலைவர்கள் தான், ஊடகங்களின் செய்திகளை ஆக்கிரமித்து வந்தனர். ஆனால், தற்ப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட்வீரர்கள் அந்த இடத்தை பிடித்துள்ளனர்.

கடந்த சிலநாள்களாக நாளிதழ்களின் முதல்பக்கத்தில் கிரிக்கெட் வீரர்களின்செய்திகள் இடம் பிடித்துவருகின்றன. எதற்காகவெனில் விளையாட்டில் சாதனைபுரிந்ததற்காக அல்ல; மாறாக சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக. இது மிகுந்த அதிருப்தியை தந்துள்ளது என தனது இணையபக்கத்தில் அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply