இந்திய எல்லைக்குள் உலோகதகடால் ஆன சாலையை அமைக்கும் சீனா இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள் தொடர்ந்து நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஊடுருவிய பகுதியிலிருந்து வாபஸ் பெற்றுச் சென்ற படைகள் மீண்டும் அதே லடாக்பகுதிக்குள் ஊடுருவி வந்துள்ளன. அத்துடன் ‘ஸ்ரீ ஜாப்’ பகுதியில் ‘பிங்கர்-8′ என்ற இடத்திலிருந்து

‘பிங்கர்-6′ என்ற இடம் வரை 5 கி.மீ தூரத்துக்கு ‘மெட்டல்’ சாலையையும் சீனபடைகள் அமைத்துள்ளன. மேலும் இந்திய வீரர்களை எல்லை கட்டுப்பாடுகோடு பகுதிக்கு செல்வதையும் சீனராணுவத்தினர் தடுக்கின்றனர்.

காஷ்மீரின் லடாக்பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி சீன ராணுவத்தினர் 19 கி.மீ. ஊடுருவி கூடாரம் அமைத்தனர். எல்லைபகுதியில் இருதரப்பு ராணுவத்தினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, இந்தியபகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ்பெற்றதாக சீனா அறிவித்தது.

இதையடுத்து, பிரச்னைமுடிந்ததாக கருதப்பட்ட நிலையில், எல்லையில் சீன ராணுவத்தினர் தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டுவருகின்றனர். லடாக் பகுதியில் அமைந்துள்ள சிரி ஜாப் என்ற இடத்தில் எல்லை கட்டுப்பாட்டுகோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் 5 கிமீ. தூரத்துக்கு உலோகதகடால் ஆன சாலையை சீன ராணுவத்தினர் அமைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தபகுதி தங்களுக்கு சொந்தமான அக்சாய்சின் என்ற இடத்தின் ஒருபகுதி என்றும் சீனா தெரிவித்துள்ளது. அந்தபகுதிக்கு அடிக்கடி சீனராணுவ ஹெலிகாப்டர்கள் வந்து செல்கின்றன.

Leave a Reply