மாவோயிஸ்டுகளின் வளர்ச்சிக்கு காங்கிரஸ்சே காரணம்  மாவோயிஸ்டுகளை இரும்புக் கரம்கொண்டு ஒடுக்க மத்திய அரசு தவறிவிட்டது மாவோயிஸ்டுகளின் வளர்ச்சிக்கு காங்கிரஸ்சே காரணம் என்று பாஜக. தேசியசெயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கருத்து தெரிவித்துள்ளார். .

இது குறித்து அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

மாவோயிஸ்டுகளின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலம் முதல் காங்கிரஸ் அரசேகாரணமாக இருந்து வந்திருக்கிறது. நாட்டின் நன்மையை விட வாக்குகளை பெறுவதில்மட்டுமே காங்கிரஸ் குறிக்கோளாக இருந்துவருவதால், மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன.

தேச விரோதசக்திகளை ஒடுக்கும் உறுதிப்பாடு மத்தியஅரசுக்கு இல்லை. இவர்களை இரும்புக்கரம்கொண்டு அடக்குவதிலும் அரசியல் உள்ளது. எனவே, ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து இவர்களை அடக்கியாகவேண்டும்.

தமிழக அரசின் இரண்டு வருட சாதனைகளில் பெரும்பாலானவை இலவசமாகத் தான் இருக்கிறது. இதை ஒருசாதனையாக எடுத்துக்கொள்ள முடியாது.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் எதுவும் தமிழகஅரசின் திட்டங்களில் இல்லை. மலிவுவிலை உணவகங்களால் மக்கள் மேலும் சோம்பேறியாக தான் போவார்கள். தமிழ் போதனைமொழிக்கு சமாதி கட்டிவிட்டு தமிழ்த்தாய்க்கு ரூ.100 கோடியில் சிலைவைப்பது தேவையற்றது. தமிழக அரசு தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தருவது வேதனை தருவதாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை கொண்டுவருவதில் அர்த்தமில்லை என்றார்.

Leave a Reply