தென்காசி காசிவிஸ்வ நாதர் கோயிலில் அம்மன் சன்னதிவாயிலை ஆகமவிதிப்படி திறப்பதற்கான ஏற்பாட்டினை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென என்று தமிழக பா.ஜ.க.,தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

தென்காசி காசிவிஸ்வ நாதர் கோயிலுக்கு நேற்று வருகைதந்த பாஜக ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- வடக்கே காசி பிரசித்திபெற்று விளங்குவதுபோல் தெற்கே தென்காசியில் காசிவிஸ்வ நாதர் கோயில் சிறப்புபெற்றதாகும். இக்கோயிலில் இரண்டுவாயில்கள் உள்ளன. இதில் காசிவிஸ்வ நாதர் கோயிலுக்கு செல்லும்வாயில் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இக்கோயிலில் உலகம்மன்கோயிலுக்கு செல்லும்வாயில் திறக்கப்படாமல் இருந்து வருகிறது.அரசு கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆகம விதிப்படி வாயில் திறக்கப்படாம இருப்பது பக்தர்களால் தெரிவிக்கப்பட்டுவருகிறது. கோயிலில் ஒரே ஒருவாயில் திறந்து மற்றொரு வாயில் மூடப்பட்டிருப்பது ஆகம விதி முறைக்கு எதிரானதாகும். பல ஆண்டுகளாக அடைக்கப் பட்டிருக்கும் அம்மன் கோயில் சன்னதி எதிர்புறம் உள்ள வாயிலை பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக நிறைவேற்றும் வகையில் அதனை திறந்துவைத்திட ஏற்பாடு செய்யவேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.

Tags:

Leave a Reply