என்.எல்.சி  பங்குகளை விற்பது தமிழகத்தை மேலும் இருட்டாக்கும் செயல் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்றுவெளியிட்ட அறிக்கை:நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) பங்குகளை விற்பதற்கு, மத்தியஅரசு முயற்சி செய்கிறது . ஏற்கனவே, என்.எல்.சி.,யின் 6.54% பங்குகள் பொதுப் பங்குகளாக உள்ளது. இந்தநிலையில், அதன் 5%

பங்குகளை மத்தியஅரசு விற்க முடிவு செய்திருப்பது , மின் பற்றாக்குறையில் இருக்கும் தமிழகத்தை மேலும் இருட்டாக்குவதுடன் , அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக் கணக்கான தொழிலாளர் எதிர் காலத்தையும் பாதிக்கும்.

சென்ற நிதியாண்டில் ரூ 1,459.75 கோடி லாபம் ஈட்டி தந்து 57 ஆண்டு கால வரலாற்றில் என்.எல்.சி சாதனை படைத்தது. இந்நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தியில் 50%ம் பெறப்பட்டும், தமிழகத்தின் மின் தேவையை பூர்த்திசெய்ய முடியவில்லை . தற்போது மத்திய அரசு இந்நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முயற்சியினால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்தமுடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றார்.

Leave a Reply