அரசியலமைப்பு சார்பு அமைப்பினை தவறாக பயன் படுத்துவதை காங்கிரஸ்   நிறுத்திக்கொள்ள வேண்டும் சி.பி.ஐ.உள்ளிட்ட அரசியலைப்பு சார்ந்த அமைப்புகளை காங்கிரஸ் அரசு தவறாக பயன் படுத்துகிறது என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் அமதாபாத் நகரில் , இஞைர் காங்கிரஸ் கட்சியினர், தேசியமாணவர் அமைப்பினர் உளளிட்ட பலர் பாஜக.வில் இணைந்தனர். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நரேந்திர மோடி பேசியதாவது ; காங்கிரஸ் ஆட்சிமீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. குஜராத் மாநிலத்தில் 4 சட்டைசபை தொகுதிகளுக்கும், இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் ஜூன் 2-ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதில் பாஜக . வெற்றிபெற பாடுபடவேண்டும். இந்த வெற்றி வாயிலாக வரப்போகும் பொதுத் தேர்தலுக்கு முன்னேற்பாட அமையவேண்டும்.மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு , சிபிஐ. உள்ளிட்ட அரசியலமைப்பு சார்ந்த அமைப்பினை தவறாக பயன் படுத்துகிறது. இதனை காங்கிரஸ் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.. இல்லை பெரும்விளைவுகளை சந்தி்க்‌‌கநேரிடும்.இந்த நிலை தொடர்ந்தால், வரப்போகும் பொதுத் தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் வெற்றிபெறாது. மீண்டும் நாட்டை ஆள மக்கள்வாய்ப்பு அளிக்கமாட்டார்கள்.. சிபிஐ போன்ற அமைப்புகளை காங்கிரஸ் தவறாக பயன்படுத்தவேண்டாம் என்று எச்ரிக்கிறேன என்று மோடி கூறினார்.

Leave a Reply