அமெரிக்காவில் சாதனையாளர் விருது பெரும் மூன்று இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறி பல துறைகளிலும் சிறப்பாக பணிபுரியும் வெளிநாட்டினரை பாராட்டும்விதமாக 'புதியமாற்றத்தை உருவாக்கிய சாதனையாளர்' எனும் விருது வழங்கப்படுகிறது. இந்தவிருதுக்கு தற்போது 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் மூன்று இந்தியர்களும் அடக்கம்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இவர்கள் 11 பேரும் விருதுவழங்கி கவுரவிக்கப்பட்டனர். இவர்களில் சாரதாஅகர்வால் (சிகாகோ), ரித்மான்தாஸ் (கன்சாஸ்), அமர்சவானி (மசாஷூசெட்ஸ்) உள்ளிட்ட மூன்று பேரும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆவார்கள்.

விருதுபெற்ற இந்தியரான சாரதா அகர்வால் ஹெல்த் கேர் மீடியா நிறுவனம் மூலம் உதவிபுரிகிறார். அத்துடன் ஆராய்ச்சி, மாநாட்டுபேச்சாளர், ஆலோசகர் உள்ளிட்ட பணிகளிலும் சிறப்பாக ஈடுபாடு வைத்துள்ளார். ரித்மான்தாஸ் கணினி தொழில்நுட்ப துறையிலும், அமர்சவானி உலக அளவில் லட்சக் கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவசேவை கிடைக்க உதவி புரிந்தும் சாதனை படைத்துள்ளார்கள்.

Leave a Reply