உணவுபாதுகாப்பு மசோதாநாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை  பாஜக. எதிர்க்கவில்லை உணவுபாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் கூட்டுவதை பாஜக. எதிர்க்கவில்லை என்று மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

உணவுபாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற இயலாதபட்சத்தில் அவசரச்சட்டத்தை மத்திய அரசு பிறப்பிப்பது சரியான வழிமுறையல்ல . இம்மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்புகூட்டத்தை கூட்டுவதை பாஜக. எதிர்க்கவில்லை.

எனினும் ஜூலை மாதம் நடைபெற வேண்டிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னரே நடத்துவது இதற்கு சிறந்ததீர்வாக அமையும் என்றார் ஸ்வராஜ்.

Leave a Reply