வாக்கிங்சென்ற  பெண்ணை கடத்தி கற்பழிப்பு தலைநகர் டெல்லியில் தினமும் சராசரியாக மூன்று , நான்கு, பாலியல் வன்முறைகள் நடக்கிறது. இந்திய பொருளாதாரம் ஏறுகிறதோ இல்லையோ இந்த கற்ப்பளிப்புகளின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்து கொண்டேதான் செல்கிறது . அந்தவரிசையில் இந்த டெல்லியின் நங்க்லோய்

பகுதியைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர், நேற்று இரவு சாப்பிட்ட பின் வாக்கிங்சென்றார். அப்போது ஒருகாரில் வந்த 3 பேர் அந்த பெண்ணை கடத்திச்சென்று, காரிலேயே வைத்து கற்பழித்துள்ளனர்.

பிறகு விடிய காலை அந்தபெண்ணை அவரது வீட்டின் அருகேயே வீசிவிட்டு சென்று விட்டனர்.இதுதொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் அன்வர் (வயது 30), சந்தீப் (32), அனீஷ் (35) என்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply