யூ ஆர் லையிங் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று மாவோயிஸ்ட் தாக்குதலில் 25 காங்கிரஸ் காரர்கள் பலியாயினர். அதற்கான காரணத்தை அறியும் மேல்மட்ட கூட்டம் ஒன்று தலைநகர் ராய்புரில் கவர்னர் சேகர் தத்தா இல்லத்தில் நடிபெற்றது.

இதில் கவர்னர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் பட்டத்து ராஜா ராகுல் காந்தி, மாநில டி.ஐ.ஜி. ராம்நிவாஸ், ம்ந்திரிச்பையில் இரண்டாவது இடம் அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால், மற்றும் முதல்வர் ராமன் சிங் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்..

அப்போது அதிகாரிகள் அளித்த தகவல்களை கேட்டு''கொதித்துப்போன" சோனியா அதிகாரிகளை பார்த்து கத்தியதுதான். இந்த வாசகம் –"யூஆர் லையிங்"

சோனியா காந்தி "கொதித்துப்போனார்"
சோனியா காந்தி " நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் " என்று கத்தினார்..

இப்படித்தான் "இந்து" பத்திரிக்கை எழுதியுள்ளது….

குஜராத்தில் கோத்ரா ரயில் நிலயத்தில் அயோத்திக்கு சென்று திரும்பி வந்துகொண்டிருந்த 56 அப்பாவி கரசேவகர்களை 40 லிட்டெர் பெட்ரோல் கொண்டு உயிரோடு எரித்தார்களே..அப்போது சோனியா ஏன் "கொதித்துப்போகவில்லை"?

சோனியா தலைமையிலான ஐ.மு.கூ ஆட்சி பீடம் ஏறிய பிறகு 9 ஆண்டில் 27 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 525 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்களே அப்பொது இவர் ஏன்" கொதிக்கவில்லை"??

டெல்லி சீக்கியர்கள் "இனப்படுகொலை" செய்யப்பட்டபோது இவருக்கு கொதிப்பு ஏன் வரவில்லை?

இலங்கையில் ஆயிரக்கணக்கில் இவரது நண்பர் ராஜபக்‌ஷேவினால் கொன்று குவிக்கப்பட்டபோது..இவரது " கொதிப்பு " எந்த ஊருக்கு போயிருந்தது??

நாட்டின் 75 சத மதக்கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதை மறைத்து நரேந்திர மோடியை " மரண வியாபாரி" என்றாரே அது பொய்யில்லையா?

2ஜி ஊழலில் "பிரமருக்கு தெரிந்துதான் செய்தேன்" என்று ஆ.ராஜா சொன்னபிறகு பிரதமர் குற்றமற்றவர் என சர்டிஃபிகேட் கொடுத்தாரே அது பொய்யில்லையா??

போஃபர் ஊழலில் தனது சொந்தக்கார "குட்ரோச்சியை"'தேடப்படும் குற்றவாளி இல்லை" என்று இண்டர்போலிடம் பொய்யாக அறிவித்து அவரது முடக்கப்பட்ட வங்கிக்கணக்கை திறந்துவிட்டாரே இது துரோகமும் ஏமாற்றுதலும் சேர்ந்த பொய்யில்லையா??

தனது மருமகன் ராபர் வத்ரா சேர்த்த 11000 கோடி பணத்தை "ரியல் எஸ்டேட் " ஊழலில் சம்பாதிக்க வில்லை நேர்மையான சம்பாதிப்பு அது என சொன்னது
ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யில்லயா?

உண்மையில் சோனியா அவர்களே நீங்கள் சொன்ன " பொய் சொல்லுகிறீர்கள்" என்ற வாசகம் முழுமையாக உங்களை நோக்கித்தான் கை காட்டுகிறது..ஏனெனில நீகள்தான் பொய் சொல்லி வருகிறீர்கள்—தொடர்ந்து……

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply