விலை உயர்வையா  . ஊழலில்செய்த சாதனையையா எதைக் கொண்டாடுகிறது காங்கிரஸ் விலை உயர்வா அல்லது ஊழலில்செய்த சாதனையையா எதைக்கொண்டாடி வருகிறது காங்கிரஸ் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் பேசியதாவது. மத்தியில் ஆட்சியமைத்து நான்கு ஆண்டுகள் பூர்த்தி அடைவதற்காக காங்கிரஸ்அரசு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால் எதைக்கொண்டாடி வருகிறது என தெரியவில்லை, தற்போது நாட்டில் நிலவும் விலை உயர்வை யா அல்லது உச்சத்தை அடைந்துள்ள ஊழல் புகார்களையா என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு அனைத்து வழிகளிலும் தோல்வி அடைந்த ஒரு அரசாகவே உள்ளது. எல்லைப்பகுதியில் நம்மை விட படைபலத்தில் சிறியநாடுகள் கூட ஊடுருறவல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. எனினும், இந்தியதரப்பில் இருந்து எந்தபதிலடியும் கொடுக்கப்படவில்லை. நமது வீரரின் தலையைவெட்டி வீழ்த்தினாலும், அமைதியாகவே இருக்கிறது பாதுகாப்புப்படை என்று குற்றம்சாட்டியுள்ளார் ராஜ்நாத்சிங்.

Leave a Reply