சட்டீஸ்கர் நக்சலைட் தாக்குதலை வைத்து அனுதாபம்பெற காங்கிரஸ் முயற்ச்சி ‘சட்டீஸ்கர் நக்சலைட் தாக்குதலைவைத்து அனுதாபம்பெற காங்கிரஸ் முயல்கிறது,’ என்று பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார் .

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட பாஜக கருத்துகேட்பு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநில பொதுச்செயலாளர் மோகன் ராஜூலு தலைமை வகித்தார். மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாராளுமன்றதேர்தலுக்கு பா.ஜ.க தயாராகி வருகிறது. தேர்தலில் எந்தெந்தபிரச்னைகளை பேசவேண்டும், எந்த மாதிரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும், எந்த_ கட்சிகளுடன் கூட் டணியமைக்க வேண்டும் என்பது குறித்து பா.ஜ.க தொண்டர்களிடம் கருத்துகேட்டு வருகிறோம்.

இந்தகூட்டங்களில் நிர்வாகிகள் கூறியகருத்துகள், கோவாவில் ஜூன் 8 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறும் தேசிய பாஜக . செயற்குழுகூட்டத்தில் தெரிவிக்கப்படும். அந்த கூட்டத்தில் கூட்டணி உள்ளிட்ட முக்கியமுடிவுகள் எடுக்கப்படும்.

சட்டீஸ்கர் நக்சலைட் தாக்குதல் கண்டனத்துக்குரியது. ஆனால், இந்த தாக்குதலில் ஆளும் பா.ஜ.க.,வுக்கு தொடர்பிருப்பதாக மாயை உருவாக்கி, தேர்தலில் அனுதாபம்தேட காங்கிரஸ் நினைக்கிறது. இந்திரா, ராஜீவ் போன்றவர்களின் மரணத்தை காங்கிரஸ் தேர்தலுக்கு பயன் படுத்தியது. இதை பயங்கரவாத தாக்குதலாக மட்டுமே கருதவேண்டும்.
என்று அவர் கூறினார்.

Leave a Reply