நரேந்திரமோடியை கண்டு  காங்கிரசுக்கு பயம் ,வெறுப்பு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மீது காங்கிரசுக்கு இருக்கும் பயம் ,வெறுப்புதான், இஷ்ரத்ஜஹான் வழக்கில் உளவுத் துறையை விசாரிக்க சி.பி.ஐ., முடிவுசெய்ததன் பின்னணியாகும் என அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து அருண் ஜேட்லி மேலும் கூறியிருப்பதாவது:

குஜராத்முதல்வர் மோடியை கொலைசெய்வதற்கு லஷ்கர்இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டியது அதில் இஷ்ரத் ஜஹானுக்கும் தொடர்பிருப்பதாக ஐ.பி. உளவுத் துறைதான், மத்திய அரசுக்கு தகவல் தந்தது . மும்பை பயங்கரவாத தாக்குதல்குற்றவாளி டேவிட் ஹெட்லியும் இஷ்ரத் லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இஷ்ரத் ஜஹானை குஜராத் காவல்துறை என்கவுன்ட்டரில் கொன்றதுகுறித்து அவரது தாயார் வழக்குதொடர்ந்தார் , இவ்வழக்கை மீண்டும்தொடங்க மத்திய அரசு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கொண்டது. மத்தியஅரசு சி.பி.ஐ அமைப்பை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன் படுத்துகிறது. இதுவும் அப்படிப்பட்ட ஒருவழக்காகவே தெரிகிறது . இந்தவழக்கின் புலன் விசாரணையின் ஒருகட்டமாக, இஷ்ரத் தொடர்பாக சேகரிக்கப்பட்ட உளவுத் தகவலின் நம்பகத்தன்மை குறித்து உளவுத் துறையிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தும்.

நரேந்திரமோடி மீது காங்கிரஸýக்கு உள்ள பயம் மற்றும் வெறுப்புதான், இந்த வழக்கில் உளவுத் துறையை சி.பி.ஐ விசாரிப்பதற்கான பின்னணி காரணமாக உள்ளது. மோடி மீதான பயத்தால் ஏற்பட்டுள்ள இந்தபாதிப்பை உளவுத்துறை தாங்கவேண்டியுள்ளது. அதன் உயர்அதிகாரிகளை எல்லாம் விசாரிப்பார்கள். உளவுத் தகவல்களை சேகரிக்கும் முறைகள் பற்றிக்கூறுமாறு அவர்களைத் துளைத் தெடுப்பார்கள். இவ்வாறு சி.பி.ஐ அமைப்பை தவறாகப் பயன் படுத்துவது உளவுத்துறை போன்ற அரசுஅமைப்புகளை அழித்து விடும். காங்கிரஸ்கட்சி அரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என தனது கட்டுரையில் அருண்ஜேட்லி எழுதியுள்ளார்.

Leave a Reply