ஆட்டு மந்தை மக்கள் இருக்கும் வரை திராவிட அரசியல் நடந்து கொண்டுதான் இருக்கும் தமிழ்நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அதைப் போல மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் வெளி உலக அறிவும், உழைப்பதற்கு அதிக அக்கறையும் இங்கே காணலாம். மிகச் சிறந்த காவல்துறை இங்கே செயல்படுவதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் இத்தனையும் மீறி இந்த திராவிட அரசியல் சாக்கடையினால் தமிழகம் நாசமாகி போய்க் கொண்டிருக்கிறது.

காமராஜர் ஆட்சி வரை நேர்மையும், நியாமும், பொதுவாழ்வில் மிளிர்ந்து கொண்டிருந்த தமிழகத்தில், கடந்த ஐம்பது வருடமாக‌ என்ன நிலமை ? லஞ்சம் என்பது எந்த ஒரு காரியத்திற்கும் அத்யாவசியமானதாக ஆகிவிட்டது. இரண்டு திராவிட கட்சி தொண்டர்களும் ஒருவருக்கொருவர் சலைக்காமல் நேர்மையற்று உள்ளார்கள். காலப் போக்கில் இலவசம் எனும் பெயரில் மக்களுக்கும் லஞ்சம் கொடுத்து நாசமாக்கி விட்டனர். பெரும்பான்மை மக்களும் குறுக்கு வழியில் செல்வதை பழ‌கிக் கொண்டுவிட்டதால், ஜனநாயகப்படி குறுக்குவழியில் செல்வதில் தவறு இல்லை என்று ஆகிவிட்டது.

90 வயதை நிறைவு செய்தவர் தொடங்கி வைத்த ஊழல் ஊற்று, இன்னும் சுரந்து கொண்டே இருக்கிறது. வார்டு கவுன்சிலர்கள் முதல் அமைச்சர்கள் வரை, அது அனைத்து பகுதிகளையும் விழுங்கி நிற்கிறது. பத்தாவது கூட தேராத வார்டு கவுன்சிலர்கள் பலர் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியை விட அதிகமாக செல்வம் ஈட்டுவதை நாம் கண் கூடாக பார்க்கிறோம், பழகி விட்டோம். அரசியல் என்பது அற்புதமான ஒரு வியாபாரமாக போய் விட்டது. இதில் பணம் உண்டு, புகழ் உண்டு, செல்வாக்கு உண்டு, யாருக்குதான் இதை விட மனம் வரும் ?

கட்சி நடத்துவதென்றால், தொண்டர் படை வேண்டும். எதற்கு இந்த தொண்டர் படை என நீங்கள் கேட்கலாம். அதிக கூட்டம் செர்ந்தால்தான் ஒரு நபருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று ஆட்டு மந்தை மக்கள் நினைக்க தொடங்குவார்கள். அதிக செல்வாக்கு உள்ள நபருக்குதான் ஆட்டுமந்தைகள் ஓட்டு போடும். ஆக இந்த செல்வாக்கை திரட்ட, அரசியல்வாதிகள் வேலையில்லாதவர்கள், குடிகாரர்கள், ரவுடிகள், பக்கிரிகள் என அனைவரையும் அரவனைத்து செல்கின்றனர். இந்த குண்டர்களை அரவனைத்து செல்ல வேண்டும் என்றால் எத்தனை நிதி தேவைப்படும் ? அதற்கு என்ன வழி ? எல்லாவிடங்களிலும் இந்த குண்டர்களுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் லஞ்ச லாவன்யங்கள் நடக்கின்றன.

முதல்வன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் முதலமைச்சர் சொல்வார் "ஒரு நாள் இந்த இருக்கையில் உட்கார்ந்து பார் தெரியும்" என்று. அது சத்தியமான உண்மை. ஆட்டு மந்தை மக்கள் இருக்கும் வரை இந்த திராவிட அரசியல் நடந்துக் கொண்டுதான் இருக்கும். பொதுவாழ்வில் தூய்மையான மக்களை தேர்ந்தெடுக்கும் துணிவும், விவேகமும் என்று இந்த சமுதாயத்தில் வருமோ அன்றுதான் இது அழியும். என்று அதிக விளம்பரமில்லாமல் ஒரு நேர்மையான மணிதரால் அனைத்து மக்களையும் சென்று அடைய முடியுமோ அன்று இந்த சூழ்நிலை மாறும். அதுவரை தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் தொண்டர்களுக்கும், குண்டர்களுக்கும், செலவுகள் நடந்தே தீரும். அந்த செலவுகளை ஈடுக்கட்ட உங்கள் தலையிலும் என் தலையிலும் பல விதங்களிலும் லஞ்சமும் இதர வசூல்களும் நடந்தேறும்.

ஒருவர் நேமையானவராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு நம் ஓட்டை செலுத்துவதுதான் நம் கடமை. அவர் வெறும் பத்து ஓட்டு வாங்கினாலும் சரி. டெபாசிட் இழந்தாலும் சரி, நல்லவருக்கு ஓட்டு போட்டோம் என்று நாம் நிம்மதி அடையலாம்.

Thanks; Enlightened Master

Leave a Reply