குஜராத்  அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க  வெற்றி  குஜராத்த்தில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.

இத்தனைக்கும் இந்த 6 தொகுதிகளிலும் காங்கிரஸ்வசம் இருந்தவை ஆகும். இந்த தொகுதிகளில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தேர்தல்நடந்தது. இதில் போர்பந்தர் லோக்சபா தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் விட்டல்ரடாடியா 1.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ்வேட்பாளர் வினு அமிபாராவை வென்றார்.அதேபோல பனஸ்கந்தா நாடாளுமன்றத் தொகுதியையும், லிம்பாடி,ஜேட்பூர் , மோர்வா ஹதவ், தோராஜி சட்டமன்றத் தொகுதிகளையும் பாஜகவே வென்றுள்ளது.

இதுகுறித்து முதல்வர் நரேந்திர மோடி கூறியதாவது:-

4 சட்டசபைத்தொகுதி மற்றும் 2 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெற்றுள்ளது. இந்ததொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தது. ஆனால் இன்று குஜராத் மக்கள் காங்கிரசுக்கு சரியானபதிலடி கொடுத்துள்ளனர். இது காங்கிரசுக்கு மக்கள் தந்துள்ள இறுதி எச்சரிக்கை.

தற்போது காங்கிரஸ்கட்சி மோசமான நிலையில் உள்ளது. பா.ஜ.க.,வை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Leave a Reply