பேராசை பெரும் நஷ்டம் ஐபில் – சூதாட்டம். சமீப நாட்களில் ஊடகங்களின் முதல் பக்கங்களை பிடித்து கொண்டிருக்கும் தலைப்பு செய்தி. இந்த சூதாட்டம் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த சோகத்திலும் விரக்தியிலும் ஆழ்த்தி விட்டது. நாம் கணவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இந்த சூதாட்டத்தில் கோடிகளில் பணம் விளையாடி இருக்கிறது. இதற்க்கெல்லாம் என்ன

காரணம்? ஒரே வார்த்தையில் சொல்வதானால் – பேராசை. இந்த பேராசையை பார்க்கும் பொழுது, ஒரு கதை ஞாபகம் வருகிறது.

ஒரு பிரமாணன், ஒரு நாள் நீண்ட பயணம் மேற்கொண்டான், அவன் போகும் வழியில் ஒரு அடர்ந்த காட்டை கடக்க வேண்டி வந்தது. வெயிலின் தாக்கத்தால் அந்த பிராமணன் மிகுந்த சோர்வுற்றான், தண்ணீர் தாகம் எடுத்தது. அப்போது அங்குள்ள ஒரு கிணற்றை பார்த்தான், மிகுந்த சந்தோஷத்துடன் தண்ணீர் இறைக்கலாம் என்று நினைத்த போது, கிணற்றில் இருந்து "உதவி" "உதவி" என்று ஒரு அபயக் குரல் கேட்டது. பிராமணன் கிணற்றில் எட்டிப் பார்த்தான், ஒரு அணில் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது. பிராமணனை பார்த்ததும், எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள், இந்த உலகத்திலேயே சிறந்த பருப்பு மற்றும் பழ வகைகளை உங்களுக்கு தருகிறேன் என்றது அந்த அணில். பிராமணனும் அந்த அணிலை காப்பாற்றி, பருப்பு மற்றும் பழங்களை பெற்றுக்கொண்டு, தன் தாகத்தையும் தனித்து கொண்டு, பயணத்தை தொடர்ந்தான்.

சிறிது தூரம் சென்றதும், ஒரு ஓநாய் வேடனின் வலையில் சிக்கி இருப்பதை பார்த்தான். அந்த ஓநாய் பிராமணனை பார்த்ததும், என்னை காப்பாற்றுங்கள், நீங்கள் இதுவரை பார்தேயிராத அற்புதமான் ஆடைகளை உங்களுக்கு அளிக்கிறேன் என்றது. சற்று பயந்த பிராமணன், பின்பு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த ஓநாயை விடுவித்து, அந்த அற்புதமான ஆடைகளை பெற்றுக்கொண்டு தன் பயணத்தை தொடர்ந்தான்.

காட்டின் எல்லையை கடக்கு தருவாயில், ஒரு புலியின் உறுமல் கேட்டது. உடனே ஓட்டம் பிடிக்கலாம் என எத்தனித்தவன், என்னவாக இருக்கும் என்ற தெரிந்து கொள்ளும் ஆவல் உந்த, மெதுவாக சுற்றும் முற்றும் பார்த்தான், அங்கே ஒரு மரத்தடியில், ஒரு புலி கண்களை மூடி தியானம் செய்து கொண்டிருப்பதை பார்த்தான். அந்த புலியின் காலடியில் ஒரு பெரிய் தங்க வளையல் கிடப்பதையும் கவனித்தான்.

அந்த புலி, ஒற்றை கண்ணை மட்டும் திறந்து, ஓ பிராமணனே, நான் அசைவம் சாப்பிடுவதை விடுத்து, சைவத்திற்கு மாறி எப்பொழுதும் தியான நிலையிலேயே இருக்க முடிவு செய்து விட்டேன். இனி இந்த தniங்கத்தின் மீதெல்லாம் எனக்கு பற்றில்லை, எனவே இந்த தங்க வளையலை நீயே எடுத்துக்கொள் என்றது.

பிராமணனுக்கு கிலி பிடித்துக் கொண்டது, இருந்தாலும் தங்கமாயிற்றே!!! தவிர புலியம் சைவமாக மாறி விட்டேன் என்கிறது, எனவே புலியின் வார்த்தைளை நம்பி, புலிக்கு அருகில் சென்று அந்த தங்க வளையலை எடுக்க முயன்றான், அடுத்த நொடி, புலி அவனை அடித்து கொன்று தனக்கு இரையாக்கி கொண்டது.

நெறி – பேராசை பெரு நஷ்டம். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!!!

நன்றி ; நடராஜன்

Leave a Reply