அத்வானி , ராஜ்நாத் சிங்கை சந்தித்த நரேந்திர மோடி முதல்வர் மாநாட்டில் பங்கேற்கசென்ற குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, டெல்லியில் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் பா.ஜ.க.,வின் வெற்றிவாய்ப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது குஜராத் இடைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றதற்கு மோடிக்கு, ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்குப்பிறகு ராஜ்நாத்சிங் நிருபர்களிடம் கூறுகையில், 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மகத்தான வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதன்பிறகு பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியையும் மோடி சந்தித்து பேசினார் . தலைமைப்பதவி தொடர்பாக மூத்த தலைவர்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு எழுந்துள்ள நேரத்தில், இந்தசந்திப்பு புதியதிருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோடி தலைமையில் தேர்தல் பிரச்சாரக்குழுவை அமைத்து 2014 மக்களவை தேர்தலை பா.ஜ.க சந்திக்கவேண்டும் என்று மூத்த தலைவர் அத்வானி விரும்புவதாகவும் . மேலும், 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நிர்வாகக்குழுவை ஏற்படுத்தவேண்டும் என்றும் விரும்புவதாகவும் . இந்தகுழுக்களை அமைக்கும்படி ராஜ்நாத் சிங்கிடம் அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply