தமிழகத்திலும் நக்ஸல்பாரி இயக்கம்; இந்து முன்னணி தமிழகத்திலும் நக்ஸல்பாரி இயக்கம் இயங்குவது உண்மை என்றும் , அதன்மீது உரிய நடவடிக்கைதேவை என்றும் இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது .

இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ,

தமிழகத்தில் நக்ஸல்பாரி, மாவோஸ்ட் இயக்கத்தின்செயல்பாடுகள் இல்லை என காவல் துறையை சேர்ந்த சிலஅதிகாரிகள் திரும்பத்திரும்ப சொல்லிவருவது தமிழக அரசையும், மக்களையும் திசைத்திருப்ப செய்யும் செயலோ என்று சந்தேகம் வருகிறது.

இந்து முன்னணி சமீபத்தில் ஒரு குழு அமைத்துவிசாரித்ததில் கீழ்க்காணும் இடங்களில் நக்ஸல்பாரி, மாவோயிஸ்ட், இடதுசாரி தீவிரவாதிகளின் செயல்பாடுகள், பயிற்சிகள் வெளிப்படையாக நடைபெற்றுவருவது தெரியவந்துள்ளது.

அவை.. பெரியகுளம், , வருசகாடு உள்காடு, கொடைக்கானல், திண்டுக்கல், அரியலூர், தேனி, மதுரை, கடலூர், தர்மபுரி, பெரம்பலூர், கிருஷ்ணகரி மாவட்டங்கள், காங்கேயம், திருப்பூர், வெள்ளக்கோவில் உள்ளிட்ட இடங்களில் வெளிப்படையாக நக்ஸல்பாரி செயல் படுவது தெரியவந்துள்ளது.

இதைத்தவிர மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர்முன்னணி, விவசாய விடுதலைமுன்னணி போன்ற 26 பெயர்களை முகமூடியாக கொண்டு தமிழகம்முழுவதும் ஆயுதபுரட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

தமிழகஅரசின் மாணவர் தங்கும்விடுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் பெயர்களில் தங்கி மாணவர்களை மூளைசலவை செய்து தங்கள் நாசவேலைக்கு கருவிகளாக மாற்றிவருகிறார்கள் நக்ஸல் பயங்கரவாதிகள். மாணவர்கள் தங்கும்விடுதிகளில் மாணவர்கள் இல்லாதவர்கள் தங்குவதை தடுத்துநிறுத்தி, மாணவர்களுக்குப் பாதுகாப்புதந்து காப்பாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply