மகாராஜ்கஞ்ச் இடைத் தேர்தல் தோல்வி தேசிய ஜனநாயக கூட்டணியின் தோல்வி மகராஜ்கஞ்ச் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவு தேசியஜனநாயக கூட்டணியின் தோல்வியாகும் என்று பாஜக. தேசிய பொதுச் செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் மக்களவை பொதுத்தேர்தலில் பிகார் மற்றும் பல இடங்களில் தேசியஜனநாயக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்றால் நரேந்திரமோடியின் பணி தேவைப்படுகிறது. மகாராஜ்கஞ்ச் இடைத் தேர்தல் தோல்வி தேசிய ஜனநாயக கூட்டணியின் தோல்வியாகும்.

ஐக்கிய ஜனதா தளத்துக்கு இது தனிப்பட்ட தோல்வியல்ல . ஒருதேர்தல் தோல்வியால் தேசிய ஜனநாய கூட்டணியில் பிளவுஏற்படாது. பிரதமர்வேட்பாளர் குறித்து பாஜக. ஆட்சிமன்ற குழுதான் முடிவுசெய்யும்.

கோவாவில் நடக்கும் தேசிய செயற்குழு கூட்டத்தின்போது அடுத்ததேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என்று முடிவுசெய்யப்படும். குஜராத்தில் இடைத்தேர்தல் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

Leave a Reply