வரவிருக்கும் மக்களவை தேர்தலின் போது நரேந்திரமோடியை ஒதுக்கிவைக்கும்படி தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எந்தகட்சியும் நிர்ப்பந்தம்செய்யவில்லை’ என பாஜக கருத்து தெரிவித்துள்ளது .

இது குறித்து பாஜக செய்திதொடர்பாளர் முக்தர் அப்பாஸ்நக்வி கூறியதாவது: வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டபோது, அதன் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன . ஆனால், குறைந்தபட்ச பொதுத்திட்டத்தின் அடிப்படையில் கூட்டணி ஆட்சியை நடத்தி எங்களுடைய ஸ்திரத் தன்மையையும், நம்பகத் தன்மையையும் நிரூபித்தோம்.

பாஜக., வை பொருத்தவரை, கூட்டணிஎன்பது கட்டாயமல்ல. இருப்பினும், கூட்டணியை நாங்கள் ஒருமதமாகவே கருதுகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருக்கும். எதிர் வரும் நாட்களில் இது மேலும் விரிவு படுத்தப்படும். அது குறித்து சரியானநேரத்தில் தெரிவிப்போம். அடுத்த மக்களவை தேர்தலின் போது குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை ஒதுக்கி வைக்குமாறு தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எந்தகட்சியும் பாஜக.,வை நிர்ப்பந்திக்கவில்லை. என்று நக்வி கூறினார்.

Leave a Reply