தேசிய ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வர இந்தியர்கள் காத்திருக்கிறார்கள் கோவாவில் பா.ஜ.க தேசியசெயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது . இதையொட்டி அந்தமாநில முதல்வர் மனோகர்பாரிக்கர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் நல்லாட்சியை வழங்குவதற்க்கு பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக முன்னணி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என இந்தியர்கள் காத்திருக்கிறார்கள்.

மக்களவை தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில், தேர்தலில் வெற்றிபெறுவதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கு, இந்த செயற்குழுகூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பா.ஜ.க மூத்த தலைவர்கள் மற்றும் பல்வேறு இதரபிரிவு தலைவர்களையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply