திருமலை ஏழுமலையானை வழிபட்ட ராமன் சிங் திருமலை ஏழுமலையானை நேற்றுகாலை, சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் தன் குடும்பத்தினருடன் , ஏழுமலையானை வழிபட்டார் . அவருக்கு ரங்க நாயகர் மண்டபத்தில், ஏழுமலையான் படமும், சிறப்புபிரசாதங்களும் வழங்கப்பட்டன.

பின் வெளியேவந்த, சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், நிருபர்களிடம் கூறியதாவது: சத்தீஸ்கரில் நடைபெற்ற மாதிரியான மாவோயிஸ்ட்களின் தாக்குதல்கள் , நாட்டில் வேறுஎங்கும் நடைபெறக்கூடாது; அச்சம்பவத்திற்கு பிறகு, சத்தீஸ்கர் மக்கள் அமைதியாக வாழவேண்டும் என்று ஏழுமலையானை வேண்டிக்கொள்ள வந்தேன். சத்தீஸ்கர் மாநிலபாதுகாப்பு பணிகளில், பல உயர் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொள்ள உள்ளோம். மாவோயிஸ்ட்கள் தாக்குதல்குறித்து, உயர்மட்ட அளவில் விசாரணை நடக்கிறது. என்று ராமன் சிங் கூறினார்.

Leave a Reply