உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி நாளையும் கோவாவில் நடைபெறும் பாஜக செயற்குழுக் கூட்டத்தில் எல்.கே. அத்வானி பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக.,வின் நாடாளுமன்ற குழுக்கூட்டம், செயற்குழுக் கூட்டம் ஆகியவை நேற்றுமுதல் கோவா தலைநகர் பனாஜியில் நடந்து வருகிறது. நேற்றும் இன்றும் அத்வானி உடல்நலக் குறைவு காரணமாக இதில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் பனாஜியில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் தெரிவித்ததாவது ; மோடி போபியாவால் காங்கிரஸ்கட்சி மிரண்டுபோயுள்ளது. இதனாலேயே மிகமோசமான ஆபாசமான அறிக்கைகளை அந்தகட்சி வெளியிட்டு வருகிறது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நாளை நரேந்திரமோடி சிறப்புரையாற்ற உள்ளார் . இன்று மாலை 5 மாநில சட்ட சபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது . பாஜக.,வில் எந்த ஒரு கோஷ்டிபிரச்சனையும் இல்லை.

பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே.அத்வானிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நாளை ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் செயற்குழு கூட்டத்திலும் பங்கேற்கமாட்டார். அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வு எடுத்து வருகிறார். 100 நாளில் அரிசிவிலையை குறைப்போம் என காங்கிரஸ் அளித்தவாக்குறுதி பொய்யாகி போய்விட்டது. நிலக்கரிசுரங்க அனுமதி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தபின்னரும் கூட பிரதமர்பதவியில் மன்மோகன் சிங் நீடித்துவருகிறார். அவர் உடனடியாக பதவி விலகவேண்டும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் ஜார்ஜ் மீதான வழக்கை சி.பி.ஐ கைவிட்டிருப்பது கூட சிபிஐ அமைப்பு எப்படி துஷ்பிரயோகம் செய்யப் படுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.

Leave a Reply