குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மீது மக்களுக்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், காங்கிரஸ்க்கு இது பயத்தை உருவாக்கியுள்ளது என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியுள்ளார்.
மக்களிடையே தங்கள்மீது இருந்த நம்பகத்தன்மையை இழந்துள்ள காங்கிரஸ்கட்சி, மோடி மற்றும் பா.ஜ.க குறித்து விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்று அவர் மேலும் கூறினார்.