மாவோயிஸ்டுகளின் அட்டூழியத்துக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் கோவாவில் பாஜக.வின் 3 நாள் செயற்குழுகூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செயற்குழுகூட்டத்தில் பேசிய ராஜ்நாத்சிங் சமீபத்தில் சதீஷ்கரில் மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கள்தெரிவித்தார்.

குஜராத் இடைத்தேர்தலில் பாஜக. வெற்றிபெற்றதற்காக நரேந்திரமோடியை அவர் பாராட்டினார். மேலும் அவர் பேசியதாவது:-

நாட்டில் தீவிரவாதமும் மாவோயிஸ்டு களின் அட்டூழியமும் பெருகிவருவதற்கு மத்திய அரசின் தவறானகொள்கைகளே காரணம். இவை இரண்டையும் ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. இத்தகைய அணுகுமுறை இல்லாதபட்சத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

நாடு சுதந்திரம்அடைந்த 66 ஆண்டுகளில் 56 ஆண்டுகளகாக மத்தியில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சிசெய்து வந்துள்ளது.

நாட்டின் வளம்மிக்கபகுதிகளில் உள்ள இயற்கைவளங்கள் இன்னமும் நக்சலைட்களின் பிடியில்தான் உள்ளன. இதற்கு காங்கிரஸ் ஆட்சியின் தவறானகொள்கையும் அணுகுமுறையும்தான் காரணம். காங்கிரஸ்சும், கம்யூனிஸ்ட் கட்சியும் தீவிரவாத செயல்பாடுகளை ஆதரித்துவந்ததன் மூலம் பெரியதவறை செய்துவிட்டன. என்று அவர் பேசினார்.

Leave a Reply