வெளிநாட்டு கொள்கையை மத்திய அரசு செயலிழக்க செய்துவிட்டது நாட்டின் தற்போதையநிலை பெரும் கவலை தருவதாக உள்ளது. என்று பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; வெளிநாட்டு கொள்கையை மத்திய அரசு செயலிழக்க செய்துவிட்டது. மாவோயிஸ்டு தாக்குதலைதடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. உள்நாட்டுபாதுகாப்பை மோசமாக கையாளுகிறது.

மேலும் தீவிரவாதத்தினை ஒடுக்க தவறிவிட்ட மத்திய அரசு, அதை அரசியலாக்க பார்க்கிறது. தீவிரவாத பிரச்சனைகளுக்கு மதச் சாயம் பூசப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்

Leave a Reply