வீராப்பு பேசும் வாய்ப்பேச்சு வீரர்கள் குப்பறக்க வீழ்ந்ததுதான் மிச்சம் பீகாரில் இடைத்தேர்தலில் ஏற்ப்பட்ட படுதோல்வி . பொது தேர்தலிலும் ஏற்ப்படாமல் இருக்க , நரேந்திர மோடியின் பிரசாரம் அவசியம் என்ற , பா.ஜ.க.வின் கருத்துக்கு . பதிலடியாக, ஐக்கிய ஜனதா தளம், "பீகாருக்கு வெளியே இருந்துவரும் தலைவர்கள் தேவையில்லை' என பதில் தந்துள்ளார்களே?

 

உன் கேள்வி! என் பதில்!

வெளிமாநில தலைவர்களை இறக்குமதி செய்யவேண்டிய அவசியம் இல்லை என வீராப்பு பேசும் இவர்கள்தான் ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தலைவரை கொண்ட கட்சியுடன் கைக்கோர்த்து ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜியை வெற்றிபெற செய்தார்கள் .

காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்த 6 தொகுதிகளையும் லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் அவர்களை குப்பறக்க தள்ளி வெற்றி பெற்ற மோடி எங்கே?. ஒரு தொகுதியை கூட காப்பாற்ற முடியாமல் லட்சம் ஒட்டு வித்தியாசத்தில் உளுத்துப்போன சாயம் வெளுத்துப்போன லல்லுவிடம் குப்பறக்க வீழ்ந்த இந்த வாய்ப்பேச்சு வீரர்கள் எங்கே?

தமிழ்தாமரை V.M.,வெங்கடேஷ்

Leave a Reply