கட்சி என்ன முடிவெடுத்தாலும் அதற்க்கு எனது முழு ஆதரவு உண்டு கோவா செயற்குழு கூட்டத்தில் தாம் பங்கேற்காததால் கட்சிக்குஏற்பட்ட தருமசங்கடத்துக்காக பா.ஜ.க துணைத் தலைவர் உமாபாரதி மன்னிப்பு கோரியுள்ளார் .

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங்குக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தேசியசெயற்குழு கூட்டத்தில் . கூட்டத்தில் நான்பங்கேற்காதது, கட்சி தலைமைக்கு தரும சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புகோருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

கோவா செயற்குழுவில் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங்குடன் சேர்ந்து ஜூன் 6ம் தேதி விமானத்தில்செல்ல திட்டமிட்டிருந்தேன்.ஆனால், அதற்கு முந்தையநாள் எனக்கு உடல்நிலை பாதிப்பு உருவானதால் போபாலிலேயே தங்கிவிட்டேன் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply